அடங்க மறுக்கும் ஜெயம் ரவி

`சங்கமித்ரா' படத்திற்கு முன்னதாக கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடங்க மறுக்கும் ஜெயம் ரவி
Published on

`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அடங்கமறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையில் ஜெயம் ரவி இசையமைக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி மார்ச் வரை தொடர்ந்து நடைபெறுகிறது. 

இந்த படத்தை முடித்த பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' பிரமாண்ட படத்தில் ஏப்ரல் முதல் நடிக்க இருக்கிறார். 

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்'  வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com