எம்.ஜி.ஆராக நடிக்க ஆசை - ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் அடங்கமறு படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், தான் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். #JayamRavi #AdangaMaru #MGR
எம்.ஜி.ஆராக நடிக்க ஆசை - ஜெயம் ரவி
Published on

‘அடங்க மறு’ படத்தை அடுத்து தனி ஒருவன் 2 படத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி அளித்த பேட்டி:

ஜெயலலிதா உங்கள் படத்தை பார்த்ததாக செய்தி வந்துள்ளதே?

அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த தீபாவளி படத்தை அவர் ரசித்து பார்த்தார் என்று இப்போது தகவல் வந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. என் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கவும், ஒரு விருது நிகழ்ச்சியிலும் அவரை சந்தித்து இருக்கிறேன்.

யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை?

எனக்கு எம்.ஜி.ஆராக நடிக்க ஆசை. வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.

அரசியலுக்கு வருவீர்களா?

நான் ஓட்டு போடுகிறேன். அந்த வகையில் பல ஆண்டுகளாக அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உங்களுடன் நடித்த கதாநாயகிகளில் யாரை பிடிக்கும்?

எனது முதல் கதாநாயகி சதாவை பிடிக்கும். ஜெனிலியா, அசின், ஸ்ரேயா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எந்த நடிகருடன் நடிக்க ஆசை?

கமலுடன் நடிக்க ஆசை. நிறைவேறவில்லை.

சில படங்களின் வெளியீட்டின்போது சம்பளத்தை விட்டு கொடுத்தீர்களே?

ஆமாம். சில நேரங்களில் தயாரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகமாகி விடுகிறது. எனவே படத்தின் வெளியீட்டுக்கு கை கொடுக்க வேண்டியதாகி விடுகிறது.

சினிமாவுக்கு குடும்ப ரசிகர்கள் மிகவும் முக்கியம். இப்போது இளைஞர்கள் தான் அதிகமாக வருகிறார்கள். முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடித்தால் குடும்ப ரசிகர்கள் பார்க்க வர மாட்டார்கள். #JayamRavi #AdangaMaru #MGR

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com