பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மால் மேலாளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சத்யம் சினிமாசுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடந்து வரும் நிலையில், பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மால் மேலாளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மால் மேலாளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
Published on

அதன் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரியில் இருக்கும் பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமா தியேட்டர்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்தை ரூ.1000 கோடி கொடுத்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக சென்னையில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சத்யம் சினிமாசுக்கு சொந்தமான தியேட்டர்கள், வீடு, அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. பெரம்பூர் எஸ் 2 சத்யம் சினிமா தியேட்டர் உரிமையாளர் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.

சோதனையை தொடர்ந்து பெரம்பூர் எஸ் 2 சினிமாசில் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com