அயன்மேன் உடையை திருடிய மர்ம ஆசாமிகள்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ‘அயன்மேன்’ அணிந்திருந்த உடை திருடப்பட்டிருக்கிறது.
அயன்மேன் உடையை திருடிய மர்ம ஆசாமிகள்
Published on

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது ‘அயன்மேன்.’ இந்த படத்துக்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட அயன்மேன் உடை குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்து போனது. அந்த உடையை அணிந்து அயன்மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டோவ்னி ஜூனியர் நடித்து இருந்தார். ஜோன் பேவ்ரியூ இயக்கினார்.

2008-ல் வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. தொடர்ந்து அயன்மேன் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி அதுவும் வசூலில் சக்கை போடு போட்டது. முதல் பாகத்தில் அயன்மேன் அணிந்திருந்த உடையை அமெரிக்காவில் உள்ள திரைப்பட பொருட்களை பாதுகாக்கும் மையத்தில் பத்திரப்படுத்தி வைத்து இருந்தனர்.

அந்த உடை இப்போது திடீரென்று காணவில்லை. இது படக்குழுவினருக்கும் அயன்மேன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயமான உடையின் இந்திய மதிப்பு ரூ.2 கோடியே 60 லட்சம் ஆகும். இந்த உடையை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com