இப்படை வெல்லும்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி - மஞ்சிமா மோகன் நடித்துள்ள `இப்படை வெல்லும்' படத்தின் முன்னோட்டம்.
இப்படை வெல்லும்
Published on

இந்த படத்தை ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும், அவர்களுடன் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசை - டி.இமான், ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன், கலை - விதேஷ், படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், சண்டைப்பயிற்சி - திலிப் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம் - வெங்கட்.கே, நிர்வாகத் தயாரிப்பு - எஸ்.பிரேம், இயக்கம் - கவுரவ் நாராயணன்.

சென்னை, அலஹாபாத், ஐதராபாத், பெங்களூர், திருவண்ணாமலை, ஓமன் என பல இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதி பேசும் போது...

“இந்த படத்தில் ராதிகா எனக்கு அம்மாவாக நடிக்கிறார். பஸ் டிரைவராக வருகிறார். இதற்காக பஸ் ஓட்ட பயிற்சி பெற்று திருவண்ணாமலையில் பஸ் ஓட்டினார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். சண்டைக்காட்சியின் போது நிஜமாகவே என்னை அடித்துவிட்டார். பாலாவின் ‘தாரைதப்பட்டை’ படத்தில் நடித்ததால் அப்படி இயல்பாக நடித்தார். மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார். ஓமன் நாட்டில் பாடல் காட்சி படமானது. அதில் சிறப்பாக நடித்தார்.

நானும் சூரியும் இந்த படத்தின் மூலம் 3-வது முறையாக சேர்ந்து நடித்திருக்கிறோம். இயக்குனர் கவ்ரவ் ஆக்ரோ‌ஷமாக கதை சொல்வார். இந்த படத்தில் முதல் முறையாக 7 கேமரா வைத்து படமாக்கி இருக்கிறார். சூரி இதில் காமெடியில் மட்டுமல்ல குணசித்திர வேடத்திலும் கலக்கி இருக்கிறார்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com