‘மகாமுனி’ பட நடிகை மகிமா நம்பியாருக்கு சர்வதேச விருது - குவியும் வாழ்த்துக்கள்

ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை மகிமா நம்பியார் வென்றுள்ளார்.
ஆர்யா, மகிமா நம்பியார்
ஆர்யா, மகிமா நம்பியார்
Published on

அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், இப்படத்திற்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மகிமா நம்பியாருக்கு, சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மகிமா நம்பியார் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

இதுகுறித்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகை மகிமா நம்பியார், இயக்குனர் சாந்த குமார், நடிகர் ஆர்யா, நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com