இந்திரஜித்

கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் `இந்திரஜித்' படத்தின் முன்னோட்டம்.
இந்திரஜித்
Published on

கவுதம் கார்த்திக் நாயகனாகவும், அஷ்ரிதா ஷெட்டி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜுவர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சென்சாரில் `யு' சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கிறது.

ஒளிப்பதிவு - ராசாமதி, படத்தொகுப்பு - வி.டி.விஜயன், எஸ்.ஆர்.கணேஷ் பாபு, இசை - கே.பி, தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ், திரைக்கதை, இயக்கம் -  கலாபிரபு.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தாணு...

“என் இளைய மகனும் சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்த போது, அது தேவையா என யோசித்தேன். அண்ணனுக்கு பட வாய்ப்பு கொடுங்கள் என்று என் மகள் சொன்னார்.

முதலில் ‘சக்கரகட்டி’ என்ற அருமையான படத்தை கலாபிரபு கொடுத்தார். நான் பல ஆண்டுகளாக கார்த்திக்கிடம் கால்ஷீட் கேட்டு வந்தேன். அவர் தரவில்லை. அவரை வைத்து படம் தயாரித்தது இல்லை. ‘இந்திரஜித்’ படத்தில் அவருடைய மகன் கவுதம் ஹீரோவாக நடிப்பது சிறப்பு.

தேவிஸ்ரீ பிரசாத்திடம் உதவியாளராக இருந்த கே.பி. இசையமைக்கிறார். கவுதம் கார்த்திக் இதில் வேறு லெவலில் நடித்துள்ளார்” என்றார்.

இந்திரஜித் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com