சினிமாவில் அதிகரிக்கும் வாரிசு நடிகைகள்

தமிழ் சினிமாவில் கமல், சரத்குமார், அர்ஜுன் ஆகியோரின் மகள்களை தொடர்ந்து, பல நடிகர்களின் மகள்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். #Kamal #Sarathkumar
சினிமாவில் அதிகரிக்கும் வாரிசு நடிகைகள்
Published on

சினிமாவில் அறிமுகமாக வாரிசு என்ற பின்புலம் உதவியாக இருக்கும். ஒரு நடிகரின் மகன் வாரிசாக அறிமுகமானால் அந்த நடிகரை மனதில் வைத்து வாரிசு நடிகரிடமும் எதிர்பார்ப்பு ஏற்படும். மகனை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்கள் மகள்களை வாரிசுகளாக அறிமுகப்படுத்தவோ படங்களில் நடிக்க வைக்கவோ யோசிப்பார்கள்.

தற்போது அந்த நிலை மாறிவருகிறது. தமிழ் சினிமாவை வாரிசு நடிகைகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். கமல்ஹாசனின் மகள்கள் சுருதி ஹாசன், அக்‌‌ஷரா ஹாசன், ராதா மகள்களான கார்த்திகா, துளசி, சரத்குமார் மகள் வரலட்சுமி, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, ரவிசந்திரனின் பேத்தி தான்யா, மேனகா சுரேஷ் மகள் கீர்த்தி சுரேஷ் என கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வாரிசு நடிகைகள் அறிமுகமாகியுள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் இயக்குனர் பிரியதர்‌ஷனின் மகள் கல்யாணி பிரியதர்‌ஷன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியும் இணைந்துள்ளனர். கல்யாணி பிரியதர்‌ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மித்ரன் இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார். கீர்த்தி அருண் பாண்டியன் புதுமுகம் தர்‌ஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com