கோலமாவு கோகிலா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
கோலமாவு கோகிலா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
Published on

நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஜூலை 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara

X

Maalai Malar
www.maalaimalar.com