விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. #VijaySethupathi #VijayChander
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் `மாமனிதன்' படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 

அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா  நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

இந்த நிலையில், ராஷி கண்ணா நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் காமெடி நடிகர் சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார். அத்துடன் விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைப்பதாக இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.  

வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna

X

Maalai Malar
www.maalaimalar.com