`வேலைக்காரன்' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்' படக்குழு அடுத்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
`வேலைக்காரன்' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
Published on

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இதில் மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

அனிருத் இசையில் ஏற்கனவே `கருத்தவென்லாம் கலீஜாம்' மற்றும் `இறைவா' உள்ளிட்ட இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com