இமைக்கா நொடிகள் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா - நயன்தாரா - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `இமைக்கா நொடிகள்' படத்தின் இசை மற்றும் டிரைலர் அறிவிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ImaikkaNodigal
இமைக்கா நொடிகள் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
Published on

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'.

ஆக்‌ஷன் த்ரில்லராக படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

மேலும் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 

ஏற்கனவே படத்தில் இருந்து `காதலிக்காதே', `விளம்பர இடைவெளி' என்று இரண்டு பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் காலை 10 மணியளவில் படத்தின் டிரைலரும் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ImaikkaNodigal #Atharvaa #Nayanthara

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com