இடிமுழக்கம்

ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் உருவாகி வரும் இடிமுழக்கம் படத்தின் முன்னோட்டம்.
இடிமுழக்கம் படத்தின் போஸ்டர்
இடிமுழக்கம் படத்தின் போஸ்டர்
Published on: 

தமிழ் திரையுலகில் சிறப்பான படைப்புகளை, தயாரித்து வரும் ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் “இடிமுழக்கம்”. இந்த திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் புதுமையான ஒரு திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. 

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும்  இப்படத்தில் நாயகியாக காயத்திரி நடிக்கிறார் மேலும் சரண்யா பொன்வண்ணன்,  MS பாஸ்கர் அருள்தாஸ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மலையாளத் திரையுலகில் பெரும் புகழை குவித்த, வினித் சீனிவாசன் அவர்கள் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com