ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இருதய ஆபரேசன்

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இருதய வால்வில் சிறு கோளாறு ஏற்பட்டதால், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சீடர்ஸ்-சினாஸ் ஆஸ்பத்திரியில் ஆபரேசன் செய்து கொண்டார்.
ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இருதய ஆபரேசன்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்னேஜர் (70). இவர் டெர்மினேட்டர் மற்றும் கோனான் தி பார் பேரியன் போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்றார்.

ஆஸ்திரிய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை 2 தடவை கலிபோர்னியாவின் கவர்னராக பதவி வகித்துள்ளார்.

இவருக்கு இருதய வால்வில் சிறு கோளாறு இருந்தது. அதற்காக அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சீடர்ஸ்-சினாஸ் ஆஸ்பத்திரியில் இருதய வால்வு மாற்று ஆபரேசன் செய்து கொண்டார்.

இந்த ஆபரேசன் பல மணி நேரம் நடந்தது. ஏற்கனவே கடந்த 1997-ம் ஆண்டு இது போன்று ஆபரேசன் செய்துள்ளார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என அவரது செய்தி தொடர்பாளர் டேனியல் கெட்செல் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை அர்னால்டும் கூறியுள்ளார். அவர் விரைவில் குணமடைய ஆஸ்திரிய பிரதமர் செபஸ்டின் குர்ஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் அர்னால்டின் நெருங்கிய நண்பர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com