ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்

`மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நாயனாக அறிமுகமாகி இருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது அடுத்த படத்தில் மீண்டும் சுந்தர்.சி உடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
Published on

சுந்தர்.சி தற்போது `கலகலப்பு-2' படத்தை இயக்கி வருகிறார். ஹப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தையும் அவ்னி மூவிஸ் தயாரிக்கிறது.

அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவிருக்கும் புதிய படத்தை அவ்னி மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. அந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கிறார். ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

வருகிற டிசம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `மீசைய முறுக்கு' படத்திற்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com