ரிலீசான சில மணி நேரத்தில் ஹீரோ, தம்பி இணையத்தில் வெளியீடு - படக்குழுவினர் அதிர்ச்சி

சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும், கார்த்தியின் தம்பி படமும் ரிலீசான சில மணி நேரத்தில் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஹீரோ - தம்பி
ஹீரோ - தம்பி
Published on

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தம்பி. பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்‌ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஹீரோ படமும் நேற்று வெளியானது.

2 படங்களும் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் பைரசி இணைய தளங்களில் திருட்டுத் தனமான வெளியாகி விட்டது. இதனால் 2 படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை நம்பித்தான் திரைப்படத்தின் வசூலே இருக்கிறது.

அதற்கு முன்னரே, திரையரங்குகளில் ரிலீசான சில மணி நேரங்களிலேயே இணையத்திலும் வெளியானதால் விடுமுறை நாட்களில் படத்திற்கு போகலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை வரவிடாமல் தடுப்பதாக அமைந்து விடும். இதனால் படங்களின் வசூல் பெரும் அளவில் பாதிக்கும் என்று திரைத்துறையினர் கவலை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com