பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு - பிரியங்கா சோப்ரா

பாலியல் தொல்லை ஹாலிவுட்டில் மட்டுமில்லை, எல்லா இடங்களிலும் உண்டு பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு - பிரியங்கா சோப்ரா
Published on

பாலியல் தொல்லை குறித்து இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, வெளிநாட்டு டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது கூறிய அவர்....

“ஹாலிவுட்டில் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் ஒருவர் மட்டுமல்ல, பாலியல் தொந்தரவு கொடுக்கும் பலர் உள்ளனர். இதுபோன்ற பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் இருக்கிறது.

பாலியல் தொல்லை கொடுப்பதற்கு ‘செக்ஸ்’ மட்டும் காரணம் அல்ல. ஒரு பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பதாலும் இதை செய்கிறார்கள். பல காலமாக பெண்களை குறிவைத்து இது நடக்கிறது. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

X

Maalai Malar
www.maalaimalar.com