ஜி.வி.பிரகாஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு

நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. #KuppathuRaja #GVPrakahsKumar
ஜி.வி.பிரகாஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு
Published on

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் `செம' படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜி.வி. தற்போது, `ஐங்கரன்', `4ஜி', `அடங்காதே', `குப்பத்து ராஜா', `100% காதல்', `சர்வம் தாளமயம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இதில் பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறகிறது. 

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி நடித்துள்ளனர். பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'எஸ் ஃபோக்கஸ்' நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எஸ்.சிராஜ் மற்றும் டி.சரவணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படத்தை வருகிற மே மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #KuppathuRaja #GVPrakahsKumar

X

Maalai Malar
www.maalaimalar.com