ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான தனுஷ் பட நாயகி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக தனுஷ் பட நாயகி நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #GVPrakashKumar
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான தனுஷ் பட நாயகி
Published on

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறாராம்.

காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி கேமராவில் படமாக்கப்படுவதாகவும், இந்த படத்துக்கு 3டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில்,   ஜி.வி.பிராகாஷ் ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷின் `அனேகன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அமைரா தஸ்தூருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், ஜாக்கி சானுடன் இணைந்து `குங் பூ யோகா' படத்தில் நடித்தார். பின்னர் சந்தானம் ஜோடியாக `ஓடி ஓடி உழைக்கனும்' படத்தில் நடித்து வருகிறார். 

அதேநேரத்தில் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அமைரா தஸ்தூர் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விஷன் ஐ மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கிறார். #GVPrakashKumar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com