சர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
சர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு
Published on

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். 

படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு தரப்பு ட்விட்டரில் அறிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

X

Maalai Malar
www.maalaimalar.com