சர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
சர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

முன்னதாக படத்தை டிசம்பர் 28-ல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் நீடித்ததால் படம் பிப்ரவரிக்கு தள்ளிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

X

Maalai Malar
www.maalaimalar.com