ஜி.வி.பிரகாஷுடன் இணையும் அருண் விஜய் இயக்குனர்

பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து படம் இயக்கிய இயக்குனர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷுடன் இணையும் அருண் விஜய் இயக்குனர்
Published on
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடித்த படங்களான ‘டார்லிங்’, ‘பென்சில்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ உள்ளிட்ட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தற்போது இவர் ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐயன்கரன்’, ‘நாச்சியார்’, ‘செம’, ‘குப்பத்து ராஜா’ பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அறிவழகன் சமீபத்தில் இயக்கிய ‘குற்றம் 23’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஜி.வி.பிரகாஷ்-அறிவழகன் இணையும் புதிய படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறதாம். விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com