சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் போட்டியாக மாறியிருக்கிறாராம்.
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
Published on

பாலா தற்போது, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகாவை வைத்து ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ராக்லைன் வெங்கடேஷும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இயோன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை செப்டம்பர் 29-ஆம் தேதி சரஸ்வதி விடுமுறை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com