வேலைக்காரனுடன் மோதும் குப்பத்து ராஜா

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படமும், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குப்பத்து ராஜா’ படமும் ஒரே தினத்தில் வெளியாக இருக்கிறது.
வேலைக்காரனுடன் மோதும் குப்பத்து ராஜா
Published on
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருக்கிறது. அன்றைய தினத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குப்பத்து ராஜா’ படமும் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

‘குப்பத்து ராஜா’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். மேலும் பார்த்திபன், பூனம் பாஜ்வா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பாபா பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com