கூர்கா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கூர்கா’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். #Gurkha #YogiBabu
கூர்கா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
Published on

சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்த உள்ளனர். கோடை விருந்தாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து "4 மங்கீஸ்" ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #Gurkha #YogiBabu

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com