குலேபகாவலி

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா - ஹன்சிகா நடிப்பில் காமெடி படமாக உருவாகி இருக்கும் `குலேபகாவலி' படத்தின் முன்னோட்டம்.
குலேபகாவலி
Published on

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. 

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா, மதுசூதனன் ராவ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு - ஆனந் குமார், இசை - மெர்வின் சாலமோன் - விவேக் சிவா, பாடலாசிரியர் - பா.விஜய், கலை இயக்குநர் - கே.கதிர், படத்தொகுப்பு - விஜய் வேலுகுட்டி, நடன இயக்குனர் ஜானி, சண்டைப்பயிற்சி - பீட்டர் ஹெய்ன், தயாரிப்பு நிறுவனம், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் - கோட்டப்பாடி ராஜேஷ், எழுத்து, இயக்கம் - எஸ்.கல்யாண். 

`அறம்' படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸின் அடுத்த படமாக இந்த படம் வெளியாகிது. எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ல் ரிலீசாக இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com