இயக்குனர் இரஞ்சித்துடன் பொங்கல் கொண்டாடிய குஜராத் எம்.எல்.ஏ

கபாலி, காலா பட இயக்குனர் பா.இரஞ்சித்தை நேரில் நடித்து அவருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி. #PaRanjith #jigneshmevani
இயக்குனர் இரஞ்சித்துடன் பொங்கல் கொண்டாடிய குஜராத் எம்.எல்.ஏ
Published on

அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தை தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் ரஜினியை வைத்து ‘காலா’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ.,வும் தலித் சமூகத்தின் இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி நேரில்  சந்தித்திருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து இருவருமே மகிழ்ச்சி தெரிவித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். 

பா.இரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில், "தோழர் ஜிக்னேஷ் மேவானியை சந்தித்தது எதிர்பாராத இனிய தருணம். என் வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள். உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகிறேன். நீங்கள் செய்யும் பணியை தொடருங்கள். உங்கள் மீது மரியாதை கொண்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல், ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில், "சூப்பர், டூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்தேன். இனிமையான நபர். அவருடனான சந்திப்பு அற்புதமானது. பொங்கலை அவருடன் மகிழ்ந்து கொண்டாடினேன்" என பதிவு செய்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com