கோலிசோடா-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Golisoda2
கோலிசோடா-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற மே 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அச்சு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கிளப்போர்ட்டு நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி வெளியிடுகிறார். #Golisoda2 

X

Maalai Malar
www.maalaimalar.com