மலையாளத்தில் களம் காணும் கவுதம் மேனன் - ஹீரோ இவரா?

படமானது வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கவுதம் வாசுதேன் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் படத்தை இயக்குவது என்று தீர்மானித்துள்ளார்.
மலையாளத்தில் களம் காணும் கவுதம் மேனன் - ஹீரோ இவரா?
Published on

மம்முட்டி தற்போது வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி நகைச்சுவை படமான டர்போவில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பனி பேனரால் தயாரிக்கப்படும் டர்போ படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.

டர்போ படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், படமானது வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் மம்முட்டி. ஆனால், இந்த படத்தை இயக்கப்போவது மலையாள இயக்குநர்கள் இல்லை. தமிழ் திரையுலகில் பிரபலமான பல்வேறு வெற்றி படங்களை அளித்துள்ள கவுதம் வாசுதேன் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் படத்தை இயக்குவது என்று தீர்மானித்துள்ளார்.

அதன்படி, மம்முட்டியை ஹீரோவாக வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் மேனன். இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து படத்தை மம்முட்டியே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படமான துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காக காத்துக்கிடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com