புத்தாண்டுக்கு சிறப்பு விருந்தளிக்கும் கவுதம் மேனன்

இயக்குனர் கவுதம் மேனன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ‘எனை நோக்கி பாயும்’ படம் மூலம் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்க இருக்கிறார்.
புத்தாண்டுக்கு சிறப்பு விருந்தளிக்கும் கவுதம் மேனன்
Published on

இயக்குனர் கவுதம் மேனன் தற்போது தனுஷை வைத்து `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. 

இசையமைப்பாளர் யார் என்று வெளியிடாமலே இப்படத்தில் இடம் பெறும் "மறுவார்த்தை பேசாதே" என்ற பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான ‘நான் பிழைப்பேனா...’ என்ற பாடலும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. 

பின்னர் இப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்று அதிகாரப்பூர்வமாக கவுதம் மேனன் அறிவித்தார். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ‘விசிறி..’ என்ற பாடலை இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் புத்தாண்டு விருந்தாக அமையும் என்றும் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com