பூஜையுடன் துவங்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

‘ஹர ஹர மஹாதேவகி’ படத்திற்கு பிறகு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அடுத்த தனது அடுத்த பஜனைக்கு அதே கூட்டணி தயாராகி இருக்கிறது.
பூஜையுடன் துவங்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’
Published on

கவுதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.  இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார்.

இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர்  பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது, ‘இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்.’ என்றார்.

அண்மையில் வெளியாகி வசூலை குவித்து வரும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com