விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `வர்மா' படத்தில் பிரபல நாயகி ஒருவரின் மகள் துருவ் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Varma #DhruvVikram
விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்
Published on

தெலுங்கில் ஹிட்டடித்த `அர்ஜுன் ரெட்டி' படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் நாயகி தேர்வு நடந்து வருகிறது. 

துருவ் ஜோடியாக நடிக்க `சில்லுனு ஒரு காதல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் `அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த ஷாலினி பாண்டே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பதாக சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில், 90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த கவுதமியின் மகள் சுப்புலட்சுமி துருவ் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் நேபாளத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. 

இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com