கர்ஜனை

செஞ்சுரி இன்டர்நே‌ஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் ‘கர்ஜனை’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த படத்தில் மேற்கத்திய நடன அழகியாக திரிஷா நடித்துள்ளார்.
கர்ஜனை
Published on

செஞ்சுரி இன்டர்நே‌ஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் ‘கர்ஜனை’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த படத்தில் மேற்கத்திய நடன அழகியாக திரிஷா நடித்துள்ளார். இவருடன் வடிவுக்கரசி, தவசி, ஆர்யன் உள்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார்.

ஒளிப்பதிவு-சிட்டிபாபு, இசை-அம்ரீஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-சுந்தர்பாலு.

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை, ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்று விடுகிறான். அதன் விளைவு என்ன என்பதே திரைக்கதை.

திரிஷா சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்லும்போது ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பது நாயகியின் பாத்திரம். இதில் அதிரடியான சண்டை காட்சிகளிலும் திரிஷா துணிச்சலாக நடித்திருக்கிறார். ஒரு கரடி சண்டையும் இடம் பெறுகிறது.

ஒரே நாள் இரவில் சம்பவங்கள் நடப்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. 5 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அதை வீடியோவாக எடுத்து மிரட்டும் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘கர்ஜனை’ தயாராகி இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com