

ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் `கேம் ஓவர்'.
பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தில் டாப்சிக்கு வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரம். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ஏ.வசந்த், கலை இயக்குனர் - சிவா சங்கர், ஆடை வடிவமைப்பு - என்.கே.நந்தினி, சண்டைப்பயிற்சி - ரியல் சதிஷ், இசை - ரான் ஈதன் யோஹன், படத்தொகுப்பு - ரிச்சர்ட் கெவின், ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், ஹரிஹரன், ஸ்டில் போட்டோகிராபர் - எம்.எஸ்.ஆனந்தன், லைன் புரொடுயுசர் - முத்துராமலிங்கம், புரொடக்ஷன் எக்சிகியுடிவ் - ரங்கராஜ், இணை தயாரிப்பு - சக்ரவர்த்தி ராமசந்திரா, தயாரிப்பு - எஸ்.சசிகாந்த், எழுத்து - அஸ்வின் சரவணன், காவ்யா ராம்குமார், இயக்கம் - அஸ்வின் சரவணன்.
படம் குறித்த இயக்குனர் அஸ்வின் சரவணன் பேசியதாவது, “மாயா படம் இன்று வரை மக்கள் மனதில் ஞாபகத்தில் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாப்சி இப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் என்றே நம்புகிறேன். கேம் ஓவர் வெளியீடு மற்றும் வரவேற்ப்பை எதிர்நோக்கி ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.
தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
கேம் ஓவர் படத்தின் டிரைலர்: