‘தங்கல்’ நாயகியின் செல்பியை திட்டி தீர்த்த ரசிகர்கள்

‘தங்கல்’ படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த பாத்திமா சனாஷேக் என்ற நடிகையின் ‘செல்பி’ படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்துள்ளனர்.
‘தங்கல்’ நாயகியின் செல்பியை திட்டி தீர்த்த ரசிகர்கள்
Published on

இவர், இடுப்பு தெரியும்படி சேலை கட்டி அதை ‘செல்பி’ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ‘அதற்கு வெட்கம் கெட்ட செல்பி’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் இப்படியா சேலை கட்டி படம் எடுப்பது? முதலில் ஒழுங்காக சேலை உடுத்த கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கே தெரிந்ததால் தான் ‘வெட்கம் கெட்ட செல்பி’ என்று தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ஒழுங்காக உடை அணிய கற்றுக்கொள்ளுங்கள், என்று எராளமான ரசிகர்கள், பாத்திமா ‌ஷனாவை திட்டி தீர்த்துள்ளனர்.

வேறு சிலர், ‘அழகாக இருக்கிறீர்கள், செம ஹாட், கத்ரீனாவின் தங்கை போன்று இருக்கிறீர்கள்’ என புகழ்ந்தும் இருக்கிறார்கள். ஏற்கனவே, இவர் வெளிநாட்டில் இருந்தபோது நீச்சல் உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்துக்குள்ளனார். இப்போது சேலை கட்டி வெளியிட்ட படமும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com