ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி

முன்னணி நடிகையான வலம் வந்த அஞ்சலி தற்போது வெளியிட்ட புகைப்படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். #Anjali
ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
Published on

கற்றது தமிழ் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இப்படத்தை அடுத்து ‘அங்காடித் தெரு’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதையடுத்து முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து பிசியாக வலம் வந்தார்.

நடுவில் உடல் எடை கூடியதால் பல பட வாய்ப்புகளை இழந்து வந்தார். இருந்தாலும் ஒரு சில படங்களில் வந்து கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிமாக மாறியிருக்கிறார். உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த அஞ்சலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com