டீச்சரை ஜோடியாக்கிய தனுஷ்

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மாரி 2’ படத்தில், தமிழ், மலையாளம் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலர் டீச்சர் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
டீச்சரை ஜோடியாக்கிய தனுஷ்
Published on

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சாய் பல்லவி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தேர்வு செய்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இதில் இடம்பெற்ற மலர் டீச்சர் கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மலர் டீச்சர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சாய்பல்லவிதான். அந்தளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். இவர் இப்படத்தில் நடிப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com