ஸ்ருதியை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்த பிரபல நடிகை

ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தில் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து, பிரபல நடிகை ஒருவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
லாபம் படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன்
லாபம் படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன்
Published on

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ‘லாபம்’. இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7 சிஎஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். 

இவர்களுடன் இப்படத்தில் தற்போது சாய் தன்ஷிகா இணைந்துள்ளார். இப்படத்தில் இணைந்தது குறித்து தன்ஷிகா கூறும்போது, ‘ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம் தான். விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. 

அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும். இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் சார் என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன். இப்படத்தில் விஜய்சேதுபதியை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com