அஜித்துக்கு முத்தம் கொடுக்க ஆசைப்படும் பிரபல நடிகை

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துக்கு, பிரபல நடிகை ஒருவர் முத்தம் கொடுக்க விருப்பம் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
அஜித்
அஜித்
Published on

தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார் கூறி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சென்னையில் தங்கியிருந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் ஒரு பே‌ஷன் ஷோவில் பங்குபெற்றார். அப்போது அவரிடம் நீங்கள் திரையுலகில் மனதார ஒருவருக்கு முத்தம் கொடுக்க விரும்பினால் யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளனர். 

அதற்கு அவர் அஜித்துக்கு என்று பதில் அளித்துள்ளார். எந்த காமமும் இல்லாமல் அவருக்கு மனதார முத்தம் கொடுக்க விரும்புகிறேன். காரணம் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் தான். அதில் வரும் 3 பெண்களுக்காக அவர் போராடியுள்ளார், அதுபோல் நான் பல கஷ்டம் அடைந்துள்ளேன் என்று பேசியுள்ளார். 

அஜித் தன் படத்தின் படப்பிடிப்பு தவிர வேறு எந்த பொது நிகழ்ச்சிக்கோ, தன் பட இசை வெளியீட்டுக்கோ கூட வராதவர். அதனால் அஜித்தை வெளியே எங்காவது ரசிகர்கள் கண்டுவிட்டால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம் உருவாகி விடும். அதோடு, அவர் சம்பந்தப்பட்ட எந்த போட்டோக்கள் என்றாலும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com