ஹிப் ஹாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல அவதாரத்தில் ஜொலித்து வரும் ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஹிப் ஹாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது
Published on
ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி ‘ஆம்பள’ படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை 2’, ‘கத்தி சண்டை’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.

‘மீசைய முறுக்கு’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கலகலப்பு 2’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஆதி. நடிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தி வரும் ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இனி சிங்கிள் கிடையாது. உங்களின் ஆசிர்வாதம் தேவை. நன்றி., என்று தனது திருமணம் குறித்து ட்வீட் செய்துள்ளார் ஆதி. மேலும் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணின் புகைப்படத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்த செய்தியை கேட்ட அனைவரும் ஹிப் ஹாப் ஆதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
X

Maalai Malar
www.maalaimalar.com