என் காதலி சீன் போடுறா

ராம்சேவா இயக்கத்தில் அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிப்பில் உருவாகி இருக்கும் `என் காதலி சீன் போடுறா' படத்தின் முன்னோட்டம். #EnKadhaliScenePodra #Mahesh #Shalu
என் காதலி சீன் போடுறா
Published on

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரித்துள்ள படம் `என்  காதலி சீன் போடுறா'.

அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி சங்கர், தியா, தென்னவன், வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு - வெங்கட், இசை - அம்ரிஷ், பாடல்கள் - ராம்ஷேவா, ஏகாதசி, கலை - சோலைஅன்பு, நடனம் - சிவா லாரன்ஸ், சாண்டி, ஸ்டன்ட் - மிரட்டல் செல்வா, எடிட்டிங் - மாரிஸ், தயாரிப்பு மேற்பார்வை - தண்டபாணி, தயாரிப்பு - ஜோசப் பேபி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராம்சேவா.

இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது, 

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப்போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார்.

நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் -  ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் “ நிலா கல்லுல செதுக்கிய சிலையா “  என்ற ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். #EnKadhaliScenePodra #Mahesh #Shalu

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com