`விவேகம்' மோசமான விமர்சனம்: `ஈட்டி' பட இயக்குநர் கண்டனம்

`விவேகம்' படத்திற்கு தரகுறைவான விமர்சனம் அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து பலரும் குரல்கள் எழுப்பி வரும் நிலையில், `ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசுவும் தனது கண்டனக் குரலை பதிவு செய்திருக்கிறார்.
`விவேகம்' மோசமான விமர்சனம்: `ஈட்டி' பட இயக்குநர் கண்டனம்
Published on

அந்த வகையில் ப்ளூ சட்டை விமர்சனத்திற்கு தமிழ் சினிமாவில் அதிர்வலைகள் கிளம்பி இருக்கிறது. அந்த விமர்னத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், `ஈட்டி' படத்தின் இயக்குநர் ரவி அரசு-வும் விவேகம் ப்ளூ சட்டை விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு இருக்கும் ஒருவரையே இவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்தால், செல்வாக்கே இல்லாத ஒரு சாதாரண ஆட்களை எப்படி பேசுவீர்கள் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. நீங்கள் எளிதாக சினிமா விமர்சனம் அளித்துவிடுவீர்கள். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் படும் கஷ்டம் உங்களுக்கு தெரியாது. சினிமா அறிவு இல்லாமல் ஏனோ தானோவென்று பேசக்கூடாது.

X

Maalai Malar
www.maalaimalar.com