நடிகராக அவதாரம் எடுத்த எடிட்டர் டான் போஸ்கோ

சுந்தர பாண்டியன் படம் மூலம் எடிட்டராக அறிமுகமான டான் போஸ்கோ, தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். #DonBosco
நடிகராக அவதாரம் எடுத்த எடிட்டர் டான் போஸ்கோ
Published on

‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார்  நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக  பணியாற்றியுள்ளார். இன்னும் இவரது எடிட்டிங்கில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’ என்ற திரைப்படம் தயாராக இருக்கும் நிலையில், ‘7 ஸ்டார் புன்னை நகர் அணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மேலும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ள ‘கொம்பு வஞ்ச சிங்கம்டா’ என்ற படத்திலும் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார்.

இந்நிலையில் ‘உத்தரவு மகாராஜா’ என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய தோற்றத்தை பார்க்கும் போது, கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

உதயா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், பிரபு, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்செயன், சோனியா போஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆஸிப்குரைஷி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

எடிட்டர் டான் போஸ்கோ, சமீபத்தில் ‘வா தமிழா’ என்ற ஆல்பத்தை இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாய அக்கறையுடன் வெளியான வா தமிழா ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. #DonBosco

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com