எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் சத்யராஜ் - வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் முன்னோட்டம்.
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
Published on

‘டைம் லைன் சினிமாஸ்’ சார்பாக சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

இதில் சத்யராஜும், வரலட்சுமியும் எடையை குறைத்து வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கிஷோர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை - சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு - சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல், எழுத்து, இயக்கம் - கே.எம்.சர்ஜுன். இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றியவர். பல குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

“ஆள் கடத்தலை மையமாக கொண்ட இக்கதை ஒரே நாளில் நடைபெறுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குழந்தை, தன் தாத்தாவுக்கு கதை சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ள கதைக்களம், நம் கண்முன்னே காட்சிகளாய் விரியும் போது, ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும்” என்றார்.

சென்னை, புதுச்சேரியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com