டியூன் - 2 படத்திற்கு வரவேற்பு

மார்ச் 1 ஆம் தேதி டியூன் பாகம் 2 வெளியானது94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் 6 விருதுகளை டியூன் பாகம் 1 வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டியூன் - 2 படத்திற்கு வரவேற்பு
Published on

டியூன் பாகம் 1 2021 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை டெனிஸ் இயக்கினார்.இப்படம் 1965 வெளிவந்த நாவலின் அடிப்படையில் எடுக்கபட்டது. ஜான் மற்றும் எரிக் ரோத் திரைக்கதை எழுதியுள்ளனர். சை ஃபை கதைகளமாக இந்த படம் வடிவமைக்கப்பட்டது.

165 மில்லியன் டாலர் பொருட் செலவில் எடுக்கபட்ட இந்த படம் 435 மில்லியன் டாலர் உலகளவு வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ட்யூன் பாகம் ஒன்றின் வெற்றியைத் தொடர்ந்து பாகம் 2 எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

அதன்படி படப்பிடிப்பு முடிந்துமார்ச் 1 ஆம் தேதி டியூன் பாகம் 2 வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது. சென்னையுள்ள பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிகொண்டு இருக்கிறது டியூன்.94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் 6 விருதுகளை டியூன் பாகம் 1 வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com