நடிகை கடத்தல் வழக்கு: திலீப்புக்கு ஆதரவு திரட்டும் ரசிகர்கள்

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் துபாய் ரசிகர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்புக்கு ஆதரவு திரட்டும் ரசிகர்கள்
Published on

இந்த நிலையில் திலீப்பின் தந்தை நினைவு நாளையொட்டி நேற்று அவருக்கு 2 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தந்தையின் நினைவு நாள் சடங்குகளில் திலீப் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் மீண்டும் ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

திலீப் கைது செய்யப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவாக சிலர் மட்டுமே கருத்து தெரிவித்தனர். பெரும்பாலானவர்கள் மவுனம் சாதித்து விட்டனர். அவரது ரசிகர்களும் திலீப்புக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை.

இதற்கிடையில் தற்போது திலீப்புக்கு ஆதரவாக அவரது துபாய் ரசிகர்கள் செயல்பட தொடங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் வாட்ஸ் அப் குரூப் தொடங்கி உள்ளனர். நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதில் தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவரை முடக்க சதி நடந்து உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் திலீப் கைது வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் அதன் பின்னணியில் உள்ள சதி பற்றி வெளிவரும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திலீப் கைது பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி ஜனாதிபதி, பிரதமருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com