தியா

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக சவுரியா - சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் `தியா' படத்தின் முன்னோட்டம் #Karu #Diya #SaiPallavi
தியா
Published on

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள படம் `தியா'. முதலில் `கரு' என தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் தலைப்பு சமீபத்தில் `தியா' என மாற்றப்பட்டது. 

ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாக சவுரியா நாயகனாகவும், சாய் பல்லவி நாயகியாகவும் நடித்துள்ளனர். வெரோனிகா அரோரா, காந்தாரி நிதின், ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டன்ட் சில்வா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு - நிரவ் ஷா, இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - மதன் கார்க்கி, கலை - ஜெயஸ்ரீ லக்‌ஷ்மி நாராயணன், ஸ்டன்ட் - ஸ்டன்ட் சில்வா, எடிட்டிங் - அந்தோணி, தயாரிப்பு - சுபாஷ்கரன், எழுத்து, இயக்கம் - ஏ.எல்.விஜய்

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி,

‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்த பிறகு தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ‘கரு’ படத்தின் கதையை கேட்ட பிறகு தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். இது போன்ற நல்ல கதைக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்.

இந்த படத்தில் பேபி வெரோணிக்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் பல காட்சிகளில் போட்டி போட்டு நடிக்க வேண்டியது இருந்தது. ‘கரு’ படத்தில் நடித்தது புதிய அனுபவம்” என்றார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Karu #Diya #SaiPallavi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com