சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா சத்யராஜ்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் குறித்து சமூக வலைதளத்தில் பரவும் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். #DivyaSathyaraj
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா சத்யராஜ்
Published on

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், திவ்யா சத்யராஜ் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திவ்யா, 

`அந்த தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். 

சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை' இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #DivyaSathyaraj

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com