இயக்குனர்கள் வாழ்த்து மழையில் இசையமைப்பாளர் அம்ரிஷ்

இசையமைப்பாளர் அம்ரிஷ் பிறந்த நாளுக்கு இயக்குனர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி, அவரை இன்ப மழையில் நனைய வைத்திருக்கிறார்கள்.
இயக்குனர்கள் வாழ்த்து மழையில் இசையமைப்பாளர் அம்ரிஷ்
Published on

இவர் இசையில் தற்போது ‘பொட்டு’, ‘கர்ஜனை’, ‘யங் மங் ஜங்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இப்படங்கள் அனைத்தும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இவர் தன்னுடைய பிறந்த நாளை நேற்று கொண்டாடி இருக்கிறார். இவருக்கு சமூக வலைத் தளத்தில் பல முக்கிய பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள்.

பின்னர் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, தியாகராஜன் உள்ளிட்ட பிரபலங்களும், ‘கர்ஜனை’ இயக்குனர் சுந்தர்பாலு, ‘தூங்காவனம்’ இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா, ‘றெக்க’ இயக்குனர் ரத்தின சிவா உள்ளிட்ட இயக்குனர்களும், பாடலாசிரியர் விவேகா மற்றும் நடிகர் சக்தி வாசு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு அம்ரிஷை வாழ்த்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com