ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்தது ஏன்? இயக்குனர் விஜய் விளக்கம்

தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். #Thalaivi #KanganaRanaut
ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்தது ஏன்? இயக்குனர் விஜய் விளக்கம்
Published on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக அறிவித்தார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கங்கனா ஜெயலலிதவாக நடிப்பதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக பிரியதர்ஷினி இயக்கும் த அயர்ன் லேடி படத்துக்காக ஜெயலலிதாவாகவே மாறி இருந்த நித்யா மேனன் தோற்றத்தை எடுத்து பகிர்ந்து இதுபோல இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா தேர்வானது எப்படி என்று இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

‘ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவு எடுத்துள்ளோம்.

தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கனா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம்.

இந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கனாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கனா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார்.

இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதம் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்.”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தப் படம் தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். #Thalaivi #Jaya #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com